"பிச்சைக்காரனு'க்குப் பிறகு வந்த படங்கள் எல்லாம் சரியாகப் போணியாகாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு உடனடியாக ஒரு வெற்றிப்படம் தேவைப்படுகிறது. இப்போதும் அவர் நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

vijayantony

அவற்றில் "திமிரு பிடிச்சவன்' விரைவில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் என்று தெரிகிறது.

""எனது லெவல் என்னவென்று எனக்குத் தெரியும். எனது படம் எப்படி வசூலிலிக்கும் என்று தெரிந்ததால்தான் அதற்கேற்ற பட்ஜெட்டில் புதிய டைரக்டர்களை வைத்து படங்களைத் தயாரிக்கிறேன். ஷங்கர் போன்ற பெரிய டைரக்டர்களை வைத்து நான் படம் தயாரிக்க முடியாது என்பதே நிஜம். அதேசமயம், பெரிய இயக்குநர்கள் என்னை வைத்து படம் எடுக்க விரும்பினால், அவர்கள் சொல்லும் கதை எனக்குப் பிடித்திருந்தால் நிச்சயமாக நடிப்பேன்'' என்கிறார் விஜய் ஆண்டனி. "திமிரு பிடிச்சவனு'க்கு'கோடி போட்டிருப்பது நிவேதா பெத்துராஜ்.